குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? பித்ரு சாபம் நீங்குமா? பிரசன்ன ஜோதிடர் Dr. Geetu watts
பொதுவாகவே நமக்கு ஜோதிடம் அப்படின்னு சொன்னா ஜாதகம், ராசி, நட்சத்திரம் இத சுத்தியே இருக்கக்கூடியதாகவே நிறைய பேர் நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா, இந்த ஜோதிடங்கள்லயே ரொம்ப பழைமையானதும் பாரம்பரியம் மிக்கதுமான பிரசன்ன ஜோதிடம் பத்தி நிறைய பேருக்குத் தெரியறது இல்ல. இன்னைக்கும் விடை காண முடியாத பல விஷயங்களுக்கு வந்து உலகம் பூராம் இருந்து மக்கள் இந்திய தேசத்துக்கு வந்து பிரசன்ன ஜோதிடம் மூலம் அதுக்கு தீர்வு கண்டுகிட்டு போறாங்க. அது நம்ம மண்ணுல நடக்கக்கூடிய தொடர்ந்து நடக்கக்கூடிய ஒரு நிகழ்வுதான். பாரம்பரியம் மிக்க இந்தப் பிரசன்ன ஜோதிடம் பத்தி பல தகவல்களை நமக்குச் சொல்றதுக்காக நம்மோட இருக்காங்க. காமாட்சி பாசக்கி பிரபல பிரசன்ன ஜோதிடர் டாக்டர் கீத்து வாட்ஸ் அவர்கள். அவங்களை நம்ம ஸ்டூடியோவுக்கு வரவேற்கிறதுல நாம ரொம்ப பெருமையடைகிறோம். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இந்த ஜோதிடத்துறையில ஒரு பெண்ணாக இருந்து சாதிச்சு பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டி இருக்காங்க. அவங்களோட இன்னைக்கு ஒரு சுவாரசியமான உரையாடலை நிகழ்த்துவோம். மேடம் வணக்கம். மேடம், உங்கள சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஜோதிடம் ஜாதகம் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்குமே வந்து ஞாபகம். உடனே ஜோதிடம்ன்னு ஒன்னு ஜாதகத்துக்குப் போயிடும் இல்ல ராசி பலனுக்குப் போயிடும். அப்படி தான் நாங்க எல்லாம் பழகி இருக்கோம். இந்தப் பிரசன்ன ஜோதிடம்ங்கிறது ரொம்ப வித்தியாசமாக இருக்கு. அதைப் பத்தி நிறைய தகவல்கள் நாங்க தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறோம். அதுக்கு முன்னாடி இந்தப் பிரசன்ன ஜோதிடத்துக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க? பொதுவா இந்த ஜோதிடத்துக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க? உங்களோட ஜோதிடம் அந்த வரலாறு, கடந்தகால வரலாறு. உங்களோட குரு யாரு? யார் மூலம் கத்துக்கிட்டீங்க? இந்தச் செய்திகள்ல இருந்து தொடங்கலாம்னு ஆசைப்படுறேன்.
நைன்டீன் எயிட்டி நைன்ல என்னோட குருநாதர் என்னைத் தேர்ந்தெடுத்தாரா இல்ல என் குருநாதர் தேடி நான் போனனான்றது தெரியாது. ஒரு இக்கட்டான பாமிலி மேட்டர். அதுல ஒரு ஹோமத்துல கலந்துகொண்டேன். அப்போ அந்த ஹோமத்துல எங்க குருநாதர் இருந்தாரு. இருக்கிறப்போ என்ன ரொம்ப உத்து உத்து பாத்துண்டே இருந்தாங்க. கடைசியில கூப்பிட்டு ஒரு வார்த்தை சொன்னாரு. இந்த மாதிரி அறுபத்தி ஐந்தாயிரம் போனது ஒரு பெரிய விஷயம் கிடையாது. அறுபத்தி ஐந்து ஆயிரம் பேர் உள்ளத்துல நீ இருக்கிற மாதிரி செய்யணும். கத்துக்கிறியான்னு சொல்லிக்கிறேன். என்ன ஏது? எனக்கு அஸ்ட்ராலஜி பத்தி ஒரு பிட்டு கூடக் நாலேட்ஜ் கிடையாது. எனக்கு ஒரே ஒரு ஆச்சரியம். என்கூட யாரும் வரல. எனக்கு என்ன பிரச்சனை என்று அவர்கிட்ட சொல்லல. பட் கரெக்டா அந்தப் பிரச்சனைய மட்டும் எடுத்துச் சொன்னாரு. அது என்னன்னா, ஒரு சின்ன ஒரு டென் இயர்ஸ் ஃபிரண்ட நம்பி ஜாமீன் கையெழுத்து போட்டு அறுபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய் நான் கட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். வீட்டுல பெரியவங்க சொல்லியும், மாமனார் சொல்லி, அப்பா சொல்லி யாரு சொல்லி கேக்காதே போட்டேன். அந்தக் குரு கிடைச்சதுனால என்னோட எண்டையர் வாழ்க்கை ஸ்டைலே மாறிடுச்சு. இப்ப பிரசன்னம் பாக்குறதுன்றது நம்ம இன்னர் மைண்ட். எல்லாருக்குமே இன்டிஷியன் வேலை செய்யும். உங்களுக்கும் வேலை செய்யும். எனக்கும் எல்லாருக்குமே செய்யும். அத கேக்குற தருணநன்றி ஒன்னு இருக்கு இல்லையா? அதுக்கு தான் இந்த ஏழு வருஷ பயிற்சி. அஷ்டமங்கல பிரச்சனம்ன்னு ஒன்னு இருக்கு. அத கத்துக்கிறதுக்கு தான். ரொம்ப கடின பரீட்சைகள் எல்லாம் நான் பேஸ் பண்ணி இப்ப நமக்கு வந்து ஒருத்தர் வராங்க. அவங்க வந்து ஜாதக ரீதியா அவங்களுக்கு ரொம்ப நல்ல திசாயுக்தி எல்லாம் இருக்கு. இருந்தாலும் அவங்க சொல்ற கஷ்டத்துக்கும் அந்த ஜாதகத்துக்கும் எந்த வித சம்பந்தம் இல்லைன்றப்போ, நாம பிரசன்னத்துல போட்டுப் பாத்தா அதுக்கான விடை கிடைச்சுடும்.
நான் ஸ்பெஷாலிட்டி. இப்ப வந்து நம்ப படிக்கிறோம். சயின்ஸ்ல வந்து நம்ப பயாலஜி இருப்பாங்க. கெமிஸ்ட்ரி அந்த மாதிரி நான் ஸ்பெஷலா எடுக்கச் சொன்னேன். என்ன ஸ்பெஷலா எடுக்கச் சொன்னது? குலதெய்வம் கண்டுபிடிக்கு கொடுக்குறவங்க உன்கிட்ட வருவாங்க. அதனால குலதெய்வம் எப்படி கண்டுபிடிச்சு? அப்ப அந்தக் காலத்துல நான் கத்துன காலத்துல வர்றவங்க எல்லாருமா அவருடைய குலதெய்வம் சொல்லின்னு எனக்கு ஒரு ஆச்சரியம். எல்லாரும் குலதெய்வம் தெரியாத யாராவது இருப்பாங்களா? அன்னைக்கு ஒரு இது. அப்புறம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் எப்படி போக்கிக் கிறது? சில நேரத்துல வந்து நம்ம கடவுள் கிட்டக்க ரொம்ப வேண்டுதல் வச்சிருவோம். ஏதாவது ஒரு ஆபத்து வந்து நம்ம கண்ணாம் என்ன சொல்லிட்டு நான் தங்க தேரை இழுக்குற மொட்டை அடிச்சு நடந்து வரேன். இந்த மாதிரி எல்லாம் பிரார்த்தனை நீங்க வேண்டுதல் வேண்டிக்கிற வரைக்கும் அது வேண்டுதல். உங்க காரியம் நடந்துருச்சுன்னா அந்தத் தெய்வத்துக்கு நீங்க இஷ்ட கடன் நிறைவேற்றலைன்னா, அப்போ அந்த நிறைவேற்றலைன்னா அந்தக் கடனுக்கு நீங்கத் தான பொறுப்பாளி. ஆமா. அப்பக் கடன் வந்து ஏறிண்டே போறப்போ உங்களுக்கு உடல் திருப்பி அடுத்த ஜென்மம் ஒரு உடல்ல சேரும்.
அப்ப எப்படி நீங்க முக்திக்கு போக முடியும்? ஆசையைத் துறந்தவன் முக்தி என்றாங்க. ஆசை யாரு துறந்தாங்க? இல்லையே.
.நான் ஒரு பெஸ்ட் குரு ஆகணும்னு சொல்றதே ஒரு ஆசைதானே!
ஆங். கரெக்ட்.
குரு என்றவர் யாருன்னு இருட்டுல இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வருவது குரு. ஒரு நல்ல குரு நமக்குக் கிடைச்சுட்டாருன்னா, நம்ம வாழ்க்கையே மாறிடும். பார் எக்ஸாம்பிள் நான். நான் படிச்சது பிஏ லிட்டரேச்சர். எனக்குக் கணக்கே வராது.
ஆனா எனக்கு அந்தக் கணக்கு போட்டுத் தான் நான் வந்து பல பேருக்கு வெளிச்சம் காட்டினேன். அதுனால எனக்கு ஒரு நல்ல குருமாரு கிடைச்சுது. அவருக்கு நன்றி சொல்லுங்க.
ஒரு பெரிய பிரசன்ன ஜோதிடம்ங்கறது வந்து ஒரு பெரிய கலை அது. இந்தக் காலத்துல அது வந்து சித்தியாகிறது ரொம்ப கஷ்டம். நீங்க இன்னைக்கு பார்த்தீங்கன்னா சோசியல் மீடியால நிறைய ஜோதிடர்கள் இருக்காங்க. அது வந்துட்டு நிறைய பேர் ஜோதிடரா மாறிட்டாங்க. ஈஸியா கத்துக்கலாம். ஆனா பிரசன்ன ஜோதிடம் அந்த மாதிரி கத்துக்க முடியாது. அது பாரம்பரியமா குரு வழியாக வரக்கூடிய ஒரு விஷயம் தான். இப்போ ஒருத்தர் வராரு. அவருகிட்ட ஜாதகம் இல்ல. ஜாதகம் இல்லாம அவருக்கு உங்களால வழிகாட்ட முடியுமா?
ஹண்ட்ரட் பெர்ஸன் வழி காட்ட முடியும். ஜாதகம் இல்லைன்னா குல தெய்வம் தெரிஞ்சிருக்கும். உங்க குல தெய்வத்துக்குத் தெரியாத விஷயங்கள் எதுவுமே கிடையாது. அது தான் குல தெய்வம் முக்கியம். என்கிட்ட வர்றவங்களுக்கு எல்லாம் குல தெய்வம் தெரியுமா? குல தெய்வம் தெரியுமான்னு கேப்பேன். குல தெய்வம் தெரிஞ்சிருச்சுன்னா, பிரசன்னத்துல குல தெய்வத்தை போடுவேன். போடுறப்போ அவங்க கேக்குற கேள்விக்கு அவங்க குல தெய்வமே வழிகாட்டும். அது வேணும். குல தெய்வம். சரி குல தெய்வம் மூணு தலைமுறை தடிஸ் மூணு அறுபது தாத்தா, அப்பா, பிள்ளைக்கு மூணு பேருக்கும் பேரன் என்கிட்ட வரான்னு வச்சுக்கோம். அப்ப அவங்களுடைய இஷ்ட தெய்வமே குல தெய்வமாக மாறி இருக்கறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.
அப்ப அவங்க குல தெய்வத்தை தேடி போக வேண்டியது இல்ல. அவங்க இஷ்ட தெய்வமே. ஏன்னா, மூணு தலைமுறை அந்த முடிக் காணிக்கை குடுக்கிறது. வருஷத்துல நல்லதுன்னா அவங்களுக்கு பொங்கல் பொங்கல் வைக்கிறது. இந்த மாதிரி நல்ல காரியம் எல்லாம் பண்ணி இருக்குறதுனால அந்த இஷ்ட தெய்வமே குல தெய்வம் மாறி இருக்கும். இதுல வந்து ஒரே ஒரு விஷயம் என்னன்னா, எனக்கு ஜாதகம் இல்லன்னாலும் கூடப் பாத்துடலாம். ஆனா குல தெய்வம் தெரியல. அந்தங்களுக்கு பாக்குறது கொஞ்சம் கஷ்டம்.
கஷ்டம். ஏன்னா இன்னைக்கு நிறைய பேருக்கு வந்து குல தெய்வம் தெரியல. ஏன்னா நிறைய பேர் எங்க குல தெய்வம் எதுன்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க ரொம்ப காலம் முன்னாடி அந்த ஊர்ல இருந்து இங்க வந்துட்டோம். ஷிப்ட் ஆயிட்டோம். ஏன்னா, இப்ப ஜோதிடர்கள்ட போனவுடனே அவங்க என்ன சொல்லுறாங்க? நீங்க உங்களுக்குக் குல தெய்வ வழிபாடு விட்டுப் போச்சு. அதனால தான் நீங்க இவ்ளோ கஷ்டப்படுறீங்க அப்படின்னு சொல்லிடுறாங்க. ஆனா அந்தக் குல தெய்வத்தை தேடி அலையுற வேலை இருக்கு பாருங்க. அது ஒரு பெரிய இதா இருக்கு. எங்க போறது, யாரு குல தெய்வம் அப்படின்னு தெரியாமலேயே தடுமாடுறாங்க. அப்பக் குல தெய்வத்தையும் இந்தப் பிரசன்னத்தின் மூலம் அறிந்து சொல்ல முடியுமா?
ஹண்ட்ரட் பெர்ஸன்ட் பண்ணி கொடுத்துட்டு இப்ப பண்ணிட்டு இருக்கேன். அது தான் நான் வந்து இப்போ ஒரு டூத்தௌசண்ட் டூன்னு இருந்து நிறைய பேருக்குக் குல தெய்வத்தை கண்டுபிடிச்சு கொடுத்து வழிபட வச்சிருக்கேன். அதுல குல தெய்வம் வந்து இப்போ அப்போ இப்போ இருக்குதுன்னு வச்சுக்கோங்க. ஒரு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதுல ஒரு குல தெய்வம் சொல்லி இருந்ததுன்னா, இப்போ அது மண்ணோடு போறதுக்கு வாய்ப்பு உண்டு. இந்த ரோட் எக்ஸ்செஞ்ச் ஊர் எக்ஸ்செஞ்ச் அந்த மாதிரி பண்றது. அப்போ அவங்க எங்க போய்த் தேடுவாங்க? தேட முடியாது. அப்போ கிராம தேவதை முக்கியம். குல தெய்வம் மட்டும் இல்ல. நீங்கச் சங்கல்பத்துல எடுத்துட்டீங்கன்னா குல தெய்வம், கிராம தேவதை வச்சுதான் பண்ணுவாங்க. ஆமா என்ன? அதனால கிராம தேவதை, கிராம தேவதை என்ன தெரியுமா? தெரியாது சார். இப்ப நீங்க என்ன தெய்வத்தை வழிபடுறீங்க? நாங்க திருச்செந்தூர் முருகன் வழிபட்டு அதை வச்சு பாத்து சொல்லலாம்.
ஆமா. ஆனா குல தெய்வத்தை வழிபடாதனால கஷ்டம் வந்ததுன்னு சொன்னா நான் ஏத்துக்க மாட்டேன். எனக்கு அது அதுல உடன்பாடு கிடையாது. சரி ஒரு குல தெய்வத்தை வழிபடாதன்னா கஷ்டம் இருக்காது. அவ கிட்ட வர வைக்கறதுக்கு சோதிக்கிறான். நினைவு படுத்துறான் அப்படின்னு சொல்லிக்கலாம். இப்போ குல தெய்வ வழிபாடு தவறிவிட்டோம். வீட்டுல எப்படி இருக்கும்னு எல்லாம் இருக்கும். நிறைவு இருக்காது. வேலைக்குப் போ. வேலைக்குப் போவாங்க. கை நிறைய சம்பாதிப்பாங்க. கரெக்டா புள்ளைக்கு வந்து கல்யாணம் ஆன ஏஜ்ல வந்து டிலே ஆயிட்டே போகுது. அப்படி இல்லன்னா கல்யாணம் ஆகும். ஏதோ ஒரு மனஸ்தாபத்துல பிரிஞ்சிடுவாங்க. திருப்பி ரெண்டாம் கல்யாணம் ஆகுறது ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா அவங்களுக்கு எந்தவித குறைபாடு இருக்காது. வருமானம் அபரிமிதமா இருக்கும். அனுபவிக்க வாய்ப்பு இருக்காது. வாழை மரங்கள் வாழை மரம் எப்போ கட்டுவோம்? மங்கலகரமான காரியம். அந்த மங்கலகரமான காரியங்கள் நடைபெற தடைப்பு அது கஷ்டப்படுத்துற மீனிங் கிடையாது. ஐயோ! என் குழந்தை வந்து என்கிட்ட வர மாட்டோம். ஒரு குல தெய்வத்துக்கும் ஒரு பெத்த தாய்க்குள்ள சம்பந்தம் தான். ஒரு இப்போ நம்ம முன்னோர்கள் வந்து என்ன சொன்னாங்கன்னா, ஒரு கிராமத்துக்கு நீங்கச் சொன்ன மாதிரி ஊர் விட்டு ஊர் மாறினாங்க. அப்போ மாறுறப்போ நம்ம தாத்தா அந்தத் தாத்தா வந்து, அப்பா என்ன பொழப்புக்கோசம் அந்த ஊருக்குப் போறேன். அப்போ இந்த மாதிரி எல்லாம் வசதி கிடையாது. உன்னை வந்து இங்க பாக்க முடியாது. அங்க இருக்கு உன் அம்சத்துல. விஷ்ணு விஷ்ணு, சிவன் சிவன், அம்பாள் அம்பாள் இல்ல கருமாரி அங்காளம்மன். இந்த மாதிரி அங்க பாத்துக்குறேன் ன்னு சொல்லி வாக்கு கொடுத்துட்டு வருவாங்க. அந்த ஊருக்குள்ள எல்லையில நுழைஞ்ச உடனே கிராம தேவதை கிட்ட சொல்லுவாங்க. இந்த மாதிரி பொழப்புக்கோசம் இந்தக் கிராமத்துக்கு வந்திருக்கேன். நீ தான் எங்களுக்கு ரட்சிக்கனும் சொல்லிட்டு உள்ள போவாங்க. உள்ள போனவுடனே விஷ்ணு விஷ்ணு கிட்ட அந்த ஊரு பெருமாள் பேரு சொல்லி அந்தக் குலதெய்வ வம்சாதரர்கள் நாங்கள் இங்க குடிபெயர்ந்ததால என்னை நீ ஏற்றுக்கொள். என் குலம் உன்னை வணங்கும்னு வாக்கு கொடுத்துருப்பாங்க. அப்படி அந்தக் குலம் நம்ம தாத்தா தாத்தாவுடைய தாத்தா எல்லாம் வாக்கு கொடுத்தது. நான் அவங்க சொத்து அனுபவிக்கறதுக்கு அண்ட் பெர்ஸன்ட் உரிமை இருக்குன்னா அவங்க கொடுத்த வாக்கை காப்பாத்துவது நம்ம உண்மையான.
நமக்குத் தான் இருக்கு அந்தப் பொறுப்பு இருக்கு.
சரி குல தெய்வத்துக்குப் போய்த் தரிசனம் பண்ணினா என்ன நடக்கும் அப்படின்னு கேட்டா. உங்களோட ஆறாம் சக்கரம் கிளின்ஸ் ஆகும். குல தெய்வம் என்பது ஒரு கூரை வேட்டம். ஒரு மழை பெய்தால் நீங்கப் போய் ஒளிஞ்சுக்கலாம். வெயில் வந்ததுன்னா ஒளிஞ்சுக்கலாம். உங்க குல தெய்வத்துக்குத் தெரியாத விஷயமே கிடையாது. அடுத்த மா அடுத்த வருஷம் உனக்கு ஆப்ரேஷன் வரப்போறது. என் குழந்தை ஆட்டோ தள்ளாடறான். என்ன வந்து ஒரு வாட்டி பாத்தான்னா அதுக்கான வழி கொடுக்குமேன்னு ஒரு ஏக்கமும் இருக்கும். இத நான் அதிகமா சொல்ற மாதிரி இருக்கும். இல்ல எங்க குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்துச் சொன்னார். குல தெய்வம் தண்டிக்காது, கோவிக்காது. எதுவுமே ஒரு தாயாருக்கு இருக்க ஏக்கம்தான் அந்தக் குல தெய்வத்துக்கு இருக்கும். அவன் என்ன வந்து பாத்து போனான்னா.
… அந்தத் தெய்வத்தை பாக்கதான் இது அதிக பிரசங்கி தனமான வேலை. எந்த ஊர்ல இருந்தோமோ நீங்க எப்பவுமே வேணும்னா இப்ப எல்லாரும் சொல்றாங்களே. ஒரு பத்து நாள் ஏர்க்காடுல இருந்துட்டு வாங்க ஏன் சொல்றாங்க? உடம்பு சரியில்லாதவங்க அந்தக் காற்று அந்த மண் வாசனை, இடம் மாற்றம் இருந்தா நம்மளுடைய மூச்சு மாறும். நம்மளுடைய மூச்சு மாறின. நம்மளோட ஆறாம் சக்கரம் சக்லன்ஸ் ஆகும். நம்ம ஆறாம் சக்கரம் சக்லன்ஸ் ஆச்சுன்னா எனர்ஜி கிடைக்கும். கடவுளுடைய அனுகிரகம் சொல்லலாம். காஸ்மிக் எனர்ஜி யும் சொல்லலாம். இது கிடைக்கும். இது கிடைக்கிறதுனால உங்க வாழ்வாதாரம் மாறும். நிச்சயமா அப்படி சக்தி வாய்ந்த குலதெய்வத்தை வழிபடாத இருக்குறது தப்பு. இது தெரியாது. வழிபடறது இல்லன்னா அது ஒரு வேற விஷயம். தெரிஞ்சும் எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சு நாங்க வெளிநாட்டுல முப்பது வருஷமா செட்டில் ஆயிட்டோம். நாங்க இந்தியாவுக்கு வர முடியல. இருபது வருஷமா நாங்க குலதெய்வத்தை வழிபடலைன்னா இதே இந்தியாவுக்கு மச்சினிக்க கல்யாணத்துக்கு வந்துருப்பாங்க. சித்தப்பா கல்யாணத்துக்கு வந்துருவோம். அப்ப அந்தக் கல்யாணத்துக்கு வந்து அட்டெண்ட் பண்ணக்கூடிய உங்களுக்கு அந்தத் தெய்வத்தை தேடிப் போக முடியலையா? அப்ப அந்த இக்னோர்ன்ஸ் வந்து அதிகவிதமான கஷ்டங்களுக்கு உள்ளாகும். புரியுது. புரியுது. நீங்க என்ன இக்னோர் பண்ணீங்கன்னா தெய்வத்தை நம்ப இக்னோர் பண்ணுனா தெய்வம் நம்மள இக்னோர் பண்ண மாட்டாங்க. தெய்வத்துக்குக் கீழ இருக்குற மேனேஜர், சப் மேனேஜர் அவங்க எல்லாம் இக்னோர் பண்ண வச்சிடுவாங்க.
வச்சிடுவாங்க. இதைத் தொடர்ந்து இன்னொரு கேள்வி கூட இருக்கு. அந்தக் குலதெய்வம் வந்தது. ஏன்னா ஜாதகம் பாக்கும்போதெல்லாம் அதெல்லாம் தான் முதல்ல சொல்லுவாங்க. வேற குறைகள் சொல்லும்போது பித்ரு சாபத்தை பத்தி எல்லாம் நிறைய சொல்லுவாங்க. பித்ரு சாபம் உங்க இதுல இருக்குன்னு வாங்க. அங்க போய் பரிகாரம் பண்ணுங்க. இங்க போய் பரிகாரம் பண்ண நிறைய சொல்லுவாங்க. உண்மையிலேயே இந்தப் பித்ரு சாபம் எப்படி வேலை செய்யும்? அப்படி மொதல்ல அப்படி ஒன்னு இருக்கா? இருந்தா அது எப்படி வேலை செய்யும்?
பித்ரு சாபம். இதுல ஒன்னு ஒன்னு இருக்கு. பித்ரு தோஷம்.
இப்போ முதல்ல ஒன்னு புரிய வைக்குறேன். ஒரு எண்பது ஆண்டுகளுக்கு முன்னாடி இப்ப எங்க தாத்தாக்கள் எல்லாம் கல்யாணம் பண்றப்போ பொருத்தம் பாக்குறது என்று என்ன பொருத்தம் பாப்பாங்கன்னா, இந்தக் குலதெய்வம் நல்லா இருக்கா? இவ குடும்பத்துல பித்ரு சாபம் எதாவது இருக்கா இல்லையான்னு பாத்துதான் கல்யாணம் பண்ணும். அது மறுவை மறுவை மறுவை. ஒம்போது பொருத்தம், எட்டு பொருத்தம், ஏழு பொருத்தம். அதுல மினிமம் மூணு பொருத்தம். அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுட்டு இதனால வந்த விஷயம். பித்ரு சாபம்ன்னா நம்ம தாத்தாக்கள் நம்ம அப்பாவோட தாத்தா அந்தக் காலத்துல வந்து சின்ன வயசுலயே வீட்டுப் பெண் குழந்தைகளுக்குக் கல்யாணம் பண்ணிடுவாங்க. அவங்க ஒரு இருபது வயசுலயே ஹஸ்பண்ட் இறந்து போயிட்டாங்கன்னா மாமியார் வீட்டுல இருக்க மாட்டாங்க. அண்ணன், தம்பியை நம்பி அப்பா அம்மாவை நம்பி குழந்தைகளைக் கூப்பிட்டுட்டு அவங்க ஒரு சொத்துனு இவங்களுக்கு குடுத்து அனுப்பிச்சிடுவாங்க. அப்படி அனுப்புறப்போ இந்த எந்த எந்த ஜாதி எந்த இது இருந்தாலும் அந்த இருபது வயசுல இருந்து அந்தப் பெண் உயிரோட இருக்குற வரைக்கும் ஏகப்பட்ட சித்திரவதை அனுபவிக்கும். மனதாலயும், உடலாலயும் எல்லாத்துலயும் அவ சொத்தைப் புடுங்கினிட்டு அவ குழந்தைகளைச் படிக்க வைக்காத அவ குழந்தைகளை வேலைக்காரங்க உபயோகப்படுத்திட்டு பண்றப்போ, ஒரு ஸ்டேஜ்ல அவ தன்னு தற்கொலை பண்ணிட்டான்னா அது சாபம். அப்போ அந்தச் சாபம் சாபம் இடல. எனக்கே ஆண்டவா இந்தக் கதி கொடுத்த. ம். என் பிள்ளைங்க இன்னைக்கு அனாதையா நிக்கறாங்களே! சப்போஸ் அவளுடைய குழந்தை தற்கொலை பண்ணிட்டு இல்ல. வேற ஏதாவது விஷப்பூச்சி கடிச்சு இறந்துட்டா அவ பர்ஸ்ட் ஆயிடும். எனக்குப் புருஷன் இல்ல. நான் கிட்ட இதுவும் பண்ணிட்டு எனக்கு இந்தக் கதி ஏற்பட்டு நல்லா இருப்பாங்களாம்னு சொல்லி நினைச்சுட்டு இறந்து போனவங்க நிறைய பேர் இருக்காங்க. இது பித்ரு சாபம்.
இந்தச் சாபத்துக்கு உங்களுடைய ஜாதகத்துல போக்கக்கூடிய தன்மை இருந்தாதான் போக்கிக்க முடியும். போக்கக்கூடிய தன்மை இருக்குன்னா இன்னைக்கு நிறைய நதிகள் இருக்கு. நிறைய பெரிய பெரிய ஸ்தலங்கள் இருக்கு. திவ்ய ஸ்தலங்கள். அந்தச் ஸ்தலங்களுக்கு எல்லாம் போக்கிக்க முடியும். அது பித்ரு தோஷம்னா நீங்க உங்களோட முன்னோர்களுக்கு அப்பா அம்மா இறந்து போன பிள்ளை செய்ய வேண்டிய கர்மாவைச் சரிவர செய்யலைன்னா, எல்லாருடைய இதுலயும் பதிமூணு நாள், பதினாறு நாள் காரியங்கள் இருக்கா?
இன்னைக்கு எப்படி இருக்கு? மூணாவது நாள் பண்றாங்க. ஏழாவது நாள் பண்றாங்க. ஒன்பதாவது நாள் பண்றாங்க. இல்ல பண்ணலாமா? தப்பு இல்லையா?
இருக்கறப்போ அந்த அப்பா அம்மா நம்மள படிக்க வச்சு எல்லாம் செஞ்சு பேரன் பேத்திங்கள பாத்து இறந்து போன அவங்களுக்கு அவங்க கடைசி காலத்துக்கு நாம செய்ய வேண்டிய கடமை. அந்த எள்ளு தீர்த்தம் தான் அவங்களுக்கு ஒரு வருஷம் ஜலமா கிடைக்கும். நடந்து போவாங்க. பித்ருலோகத்துல ஜலமா கிடைக்கும். அதைச் சரிவர செய்யலன்னா வருடத்துக்கு ஒரு முறை எல்லா ஜாதிகளிலும் கும்புடுறது உண்டு. பிராம்ணர்கள் வந்து வருஷம் வருஷம் தர்ஷணம் கொடுப்பாங்க. இன்னும் சில ஜாதிகளிலும் தர்ஷணம் உண்டு. சில ஜாதில வந்து மாழி அமாவாசையில விட்டுக்குடுக்க மாட்டாங்க. முன்னோர்களுக்குத் தான் சொல்லிப் பண்றது. அதெல்லாம் சரி வர அது செய்யறனால என்ன இருக்கு? என்ன வந்துடப்போகுதுன்னா, அந்தத் தாத்தா அம்மாவோட தாத்தா பாட்டியின் சொத்தை நீ அனுபவிக்கறதுக்கு அருகதை இருக்குன்னா, இந்தக் கடமையையும் செய்யறதுக்கு அருகதை உனக்கு இருக்கு. இருக்கு. மொதல்ல பித்ரு தோஷம் பித்ரு சாபத்தைப் பேசுற பதிலுல அந்தப் பித்ருக்கு நமக்கு எவ்ளோ blessings கிடைக்குது தெரியுமா? இப்ப திடீர்னு ஒரு இடத்துக்குப் போயிட்டு இருக்கோம். தடிக்கி விழப்போறோம். தடிக்கி விழுந்துருந்தோம்னா அந்தப் பஸ் நம்மள மோதி இருக்கும்னு சொல்லிப்போ. யாரு செஞ்ச புண்ணியமோ, எங்க முன்னோர்கள் செஞ்ச புண்ணியம் நான் காப்பாற்றப்பட்டன்னு சொல்றோம் இல்லையா? அதெல்லாம் அவங்க தான செய்றாங்க. இன்னைக்கு நாம நிறைவா ஒரு வாழ்க்கை வாழறோம்னா அதுக்கு பூர்வ ஜென்மத்துல நாம எப்போ மனிதனா பொறந்து இருந்தோமோ, நம்ம பசங்க சரிவர நமக்குப் பித்ரு கர்மங்கள் செய்யற தொட்டுதான் இன்னைக்கு நாம நிறைவா வாழறோம்.
அதே மாதிரி நம்ம குழந்தைகளும் நிறைவா வாழணும்ன்னா நம்ம பித்ருக்களுக்கு நம்ம செய்ய வேண்டிய கர்மாவை செய்யணும். இதைதான் கிருஷ்ண பரமாத்மா கர்மாவை செய், பலனைத் தான் எதிர் பார்க்காதே என்று சொன்னான். நீ கர்மாவை செய்றதுக்கு தான் பல கர்மாக்கில பாக்கி வச்சுண்டு இந்த உடலை எடுத்துருக்கேன். அதெல்லாம் சரிவர செய். அதே மாதிரி இந்தப் பித்ரு சாபம் நீங்கிடும். நீங்கக்கூடிய சாபம்ன்றது இருக்கு. நீங்க அந்தச் சாபம் அனுபவிச்சு தான் கழிக்கனும்றதுக்கு, அதுக்கு எதுவும் யாரும் ஒன்னும் பண்ண முடியாது.
ஒண்ணும் பண்ண முடியாது. பிரசன்னம் பாக்குறீங்க இல்ல. பிரசன்னம் பாக்குறதுக்கு வேற வேற முறைகள் இருக்குதா? வித்தியாசமான முறைகள் இருக்குதா? என்னென்ன வகையில எல்லாம் பிரசன்னம் உங்களால பாக்க முடியும்?
இப்போ நாம் பாக்குறது வந்து எந்நாட்டு மனிதர்களுக்குப் பாக்குறேன். தெய்வ பிரசன்னம் பாக்குறவங்க இருக்காங்க. அத நான் கத்துக்கல. அப்போ அதுக்கு நான் வந்து எனக்கு ஏஜும் கிடையாது. எனக்கு அவ்வளவு பக்குவம் இல்ல. சோ, அதுக்கு நிறைய தியாகங்கள் பண்ணனும். எனக்கும் ஃபேமிலி இருக்கு, குழந்தை இருக்கு, குடும்பம் இருக்கு. சோ, அதுக்குள்ள நான் போக முடியாது. நான் பாக்குற பிரசன்னம் ஷோலி பிரசன்னம். அது எதிர வர்றப்போ அவங்களுக்காகப் போட்டுப் பாக்குற பிரசன்னம். இன்னொன்னு தீப பிரசன்னம். வெளிநாட்டில் இருந்து கேக்குறாங்கன்னு வச்சுக்கோங்க. அவங்களுக்கு தீபத்துல பாத்து பிரசன்னம் சொல்றேன். இன்னொன்னு வந்து தாம்பூல பிரசன்னம். இப்ப ஃபார் எக்ஸாம்பிள் வராங்க. இவங்க ஜாதகத்துல பித்து சாபம் இருக்கு. போக்கிக்க முடியுமா முடியாதான்றத அவங்க கொண்டுவர தாம்பூலத்தை வச்சு பாத்து சொல்லுவேன்.
அது எப்படி? அதை எப்படி சொல்ல முடியும்? தாம்பூலத்தை வாங்கி கவுண்ட் பண்ற மாதிரி எப்படி?
அது வந்து அதான் இன்ட்ருஷன் வேலை செய்யும். எங்களுக்கு அந்த இன்ட்ருஷன் வேலை செய்யுது. செய்ற இன்ட்ருஷன் எங்க காதுல நாங்க கேக்க முடியும்.
இப்போ உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா நான் ஷோலி போடுறேன். ஷோலி போடுறப்ப எனக்கு ஒரு பழனி முருகரும் மலையும் காட்டுறது. வேற எதுவுமே காட்டல. அப்போ வந்தவங்ககிட்ட கேக்குறேன் நான், ஏம்மா பழனி முருகருக்கு நீங்கத் தான் வேண்டுதல் வச்சுருக்கீங்களா? அப்போ அவங்க கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, ஆமா மேடம். அந்த எந்தப் பையன் கோசம் கேக்கணும்னு அந்தப் பையன் பிளஸ்டூல வந்து கொஞ்சம் கீழ விழுந்துட்டான் மேடம். அப்போ வந்து பால் குடம் காவடி தூக்குறேன்னு சொன்னாங்க.
இன்னைக்கு எவ்வளவு வருஷம் ஆச்சு? அவன் இன்ஜினியரிங் நாலு வருஷம் முடிச்சு, அதுக்கப்புறம் இன்னொரு ரெண்டு வருஷம் ஆறு வருஷம் கோர்ஸ் முடிச்சு, இன்னைக்கு அவன் வேலையில இருக்கிறான். அஞ்சு வருஷம் வேலை பண்ணிட்டு மூணு வருஷம் வேலை பண்ணிட்டு கல்யாணத்துக்கு வந்து கேக்குறாங்க. இந்த டூ எதுக்கு இப்ப காட்டணும்? இது செஞ்சா அது நடக்கும்.
அதனால நான் முன்னாடியே சொன்னேன். உங்களுக்குக் கடவுளுக்கு வேண்டுதல் வேண்டிக்கிற வரைக்கும் நம்ம வேண்டுதல் வேண்டுதலா இருக்கும். அதுக்கு பகவான் நிறைவேத்தி கொடுத்துட்டாருன்னா, அந்த வேண்டுதல் வந்து நமக்குக் கடன் மாதிரி நாம கடன் படுறோம். பண்றது. அப்போ அதை எப்படி காட்ட முடியறது? அந்த என்னோட உள் உணர்வு, என் உள்ள எனக்குள்ள இருக்குற பரமாத்மாவும், உங்களுக்குள்ள இருக்குற பரமாத்மா ஒன்னு தான். திதி அஷ்ட மங்கள பிரசன்னம்ன்னு ஒன்னு இருக்கு. அது கொஞ்சம் ரொம்ப கஷ்டம். அதுல வந்து திதி, நட்சத்திரம், வாரம், நீங்க வர்ற நேரம், லக்னம் இந்த மேன் அஞ்சு. இப்போ ஒருத்தர் கேட்டுண்டே இருப்பாங்க. குழந்தை இல்ல ஒருத்தருக்கு. இவனுக்கு எப்போ குழந்தை பொறக்கும்னு ஒரு ஏழு வருஷம் கேக்காத, போகாத ஜோசியர் இல்ல, போகாத கோவில் இல்லன்னு வச்சுக்கோங்க. அப்போ அவங்களுக்கு ஆண்டவன் வந்து இது அங்க சுப்பிரமணியன் ஜோசியர் இருக்கு, அவங்கள போய்ப் பாருங்கன்னு சொல்றான். அது தான் அது. தீர்வு கிடைக்கப் போறது.
நீ கேட்டா அந்தத் தீர்வுக்கு வழி கொடுக்கிறேன், போய்ப் பாருன்னு சொல்றாரு வச்சுக்கோங்க. அத பாக்குறாங்க. அவர் சொல்றாரு நீங்க இந்த மாதிரி முருகருக்குப் போயி வழி பண்ணுங்கன்னு சொல்றேன். இப்போ ஜனங்களுக்கு எல்லாம் ஐயாயிரம் ரூபா வாங்குற டாக்டர் தான் நல்ல டாக்டர்.
இப்ப அதே மாதிரி எல்லாம் இதையும் அவங்களே பிரிச்சுட்டு நிக்காங்க. அவர் பாவம் அம்பது ரூபா வாங்கிண்டு அவருக்கு அவருக்கு வாக்குப்பலிதான் இருக்கு. அவருக்கு அந்த வாக்குப்பலித்துக்கு சொன்னத அவங்க செஞ்சு இருந்தாங்கன்னா குழந்தை பொறந்துருக்கும். அவங்க என்ன பண்ணுவாங்க? அவர் வந்து பதினாறு வாரம் போ சொன்னாருன்னா, ஏழாவது வாரம் என்கிட்ட வருவான். அப்போ இந்த முருகன் இல்லங்க நாங்க வடப்பழனி முருகருக்கு ஒன்னும் பாக்கிய இல்லங்கன்னு சொல்றப்போ, சரி யாராவது முருகருக்கு வந்து பரிகாரம் எதாவது எடுத்துக் கொடுத்து… ஆமா மேடம். போன ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஜோசியர்கிட்ட போனேன். அவங்க வடப்பழனி முருகருக்குப் பதினாறு வாரம் போ சொன்னாங்க. ஆறு வாரம் போனோம் மேடம். அதுக்கப்புறம் என்னமோ தெரியல, போக முடியாத தடைப்பட்டுடுச்சு. என்ன தடைன்னு சொன்னா, தெரியல மேடம். தடைப்பட்டுடுச்சு. ஒரு மூணு வாரம் போக முடியல. அதனால விட்டுட்டேன். இப்ப நான் என்ன சொல்றேன்? இது மூலியமா உங்க விகடன் மூலியமா நான் கேக்குறேன். எந்த ஜோசியர் என்ன பரிகாரம் சொன்னாலும் அத நீங்க இயற்கை கிட்டயோ தெய்வத்துகிட்டயோ கேட்டுன்றதுனால தெய்வமா உங்களுக்குப் பாத்து கொடுக்கிற ஒரு ஆப்பர்ச்சுனிட்டி. அந்த ஆப்பர்ச்சுனிட்டி மிஸ் பண்ணாதீங்க. அத பாதியில விட்டுட்டு இன்னொரு ஜோசியர் தேடி போகாதீங்க.
நல்ல நல்ல அற்புதமான ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கீங்க. இது எல்லாருமே இந்த மாதிரியான தவறு செய்திருப்போம். இப்ப நான் கூட அந்த மாதிரியான தவறுகளை நான் கூட செய்திருப்பேன். இது ஒரு பெரிய ஒரு ஐ ஓப்பனரா இருக்கும்னு நினைக்கிறேன் மக்களுக்கு. வந்து கலந்து கிட்டதுக்கு ரொம்ப நன்றிம்மா.