தவறாக பரிகாரம் செய்தால் பலன் கிடைக்குமா? கந்த ஷஷ்டி கவசம் செய்யும் மேஜிக்! – Dr. Geetu Watts
சக்தி விடம் நேயர்களுக்கு அன்பு வணக்கம். பிரசன்ன ஜோதிடம் குறித்து பல்வேறு அற்புதமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக காமாட்சி உபாசகி திருமதி டாக்டர் கீத்து வாட்ஸ் அவர்கள் மீண்டும் நம்மளோட ஸ்டூடியோவுக்கு வந்திருக்காங்க. இன்னைக்கும் பிரசன்ன ஜோதிடம் குறித்தும் பொதுவாக நாம் செய்ய வேண்டிய வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்தும் நம்மளோட உரையாட இருக்காங்க. முதல்ல நாம அவங்கள வரவேற்கலாம். மேடம் வணக்கம் மேடம்.
மேடம். போன வீடியோ ரொம்ப அருமையா போயிருக்கு. நிறைய ரீடர்ஸ் வந்து அதைப் பாத்துட்டு வந்து ரொம்ப சந்தோஷமா கமெண்ட் பண்ணி இருந்தாங்க. நிறைய பேர் உங்களோட நம்பர் எல்லாம் கேட்டு இருந்தாங்க. அவங்க லைஃப்ல நடந்த விஷயங்களை அதோட அவங்க கோர் ரிலேட் பண்ணி பாக்குறாங்க அப்படிங்கறது ரொம்ப சந்தோஷமா இருந்தது. நீங்க மறுபடியும் எங்களோட வந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். மேடம், நாம குல தெய்வம் பத்தி போன தடவை பேசினோம். அது தொடர்பாகவே இன்னும் கூட ரெண்டு மூணு கேள்விகள் கேட்டுச் சொல்லுங்க அப்படின்னு சொல்லிட்டு ஒரு சில அன்பர்கள் நமக்குச் சொன்னாங்க. குல தெய்வம் ஒரே குல தெய்வம். பிரச்சனையும் ஒரே பிரச்சனை. இப்ப எங்க ஊரு தான். எங்க ஊர்ல இருக்குறவருக்கே வந்து எங்க குல தெய்வம் தான். அவருக்குக் குல தெய்வம். அவருக்கு வந்து ஒரு பிரச்சனை இருக்கு. எங்களுக்கு இருக்கக்கூடிய அதே பிரச்சனை தான் அவருக்கு இருக்கு. இப்ப நான் உங்ககிட்ட வரேன். பிரசன்ன ஜோதிடம் மூலம் அதுக்கு தீர்வு தெரிஞ்சுக்கிறேன். இப்ப அவரும் அதே பிரச்சனைக்கு அதே தீர்வை கடைபிடித்தால் போதுமா?
ரொம்ப நல்ல கேள்வி. வந்து சில பொதுப்படையான பிரச்சனைகளுக்கு அது சரிப்பட்டு வரும். ஏன்னா திருப்பி நான் சொல்றது குல தெய்வம் ஒரு அம்மா போலதான். நாலு குழந்தைங்களுக்கு பசின்னு சொல்லி வந்த அன்னைக்கு என்ன பண்ணிக்கும் அம்மா என்ன கொடுக்குறாங்க? நாலு குழந்தைங்க ஆனா சம்டைஸ் வந்து ஒரு குழந்தைக்குப் புடிச்சது பண்ணி வச்சிருக்கோம். அந்த மாதிரி ஒரு எக்ஸாம்பிள் சொன்னேன். ஒரு கிளைன்ட் என்கிட்ட வந்தாங்க. அவங்க குழந்தை பதினாறு வயசாயும் புஷ்பவதி ஆகலை அண்ணிட்டு வந்தாங்க. அவங்களுக்கு குல தெய்வம் கன்னி அம்மன். கன்னி அம்மன் குலதெய்வம் வர்றப்போ பிரசன்னம் போட்டுப் பாக்குறப்போ அவங்க வந்து பொட்டு வந்து பெரிய மனுஷனா தான் சுத்துவாங்க. ஆனா குலதெய்வத்துக்குப் பொட்டு விநியோகம் பண்ற மாதிரி பக்தர்களுக்குக் குலதெய்வ கோவிலுக்குப் போயி அந்தம்மா கைப்பட பொட்டு விநியோகம் பண்ற மாதிரி பாத்து அத பத்தி கேக்குறப்போ அவங்க எங்களுக்கு அந்தப் பழக்கம் இல்ல அண்ணிட்டு சொல்லி ஒரு அரை மணி நேரம் பேசின பிறகு அவங்க கூட அத்தை வந்துருந்தாங்க. அப்போ ஒரு வாட்டி எங்க குலதெய்வத்துக்கு இந்தக் குழந்தையோட பர்த்டே அன்னைக்கு போனோம். அப்போ எங்க பூஜாரி வந்து இந்தப் பொண்ணு கையால.
அந்தப் பொட்டு பிரசாதமா கொண்டு வந்து இந்தப் பொண்ணு கையால கொடுங்கன்னு சொன்னாங்க. நாங்க அத செய்யலைன்னு. பாருங்க, இப்போ அவங்க குலதெய்வம் பின் கூடி வரக்கூடிய பிரச்சனைக்கு முன்னாடியே ஒரு பூஜாரி மூலமா சொன்னாங்க. சார், நான் என்ன சொன்னேன்? இப்ப அத தான் காட்டுறதுனால நீங்க ஒரு முறை போயிட்டு அந்தப் பரிகாரம் பண்ணிட்டு வாங்க. அதுக்கப்புறம் ஆகலைன்னா மூணு மாதம் கழிச்சு வந்து என்ன பாருங்கன்னு சொல்லி அனுப்பிச்சேன். அவங்க அத பரிகாரம் பண்ணாங்க. ஒரு மாத் ஆஃப் மந்த் ஆன்வல் எக்ஸாம் முடிஞ்ச கையோட அந்தக் குழந்தை புஷ்பவதி. இப்போ இந்தப் பரிகாரம் அந்தக் கன்னி அம்மன் குலதெய்வம் இருக்குறவங்களுக்கு எடுப்படும். ஏன்னா இது பொதுப்படையான பலன். எங்கியோ கிராமத்துல இருப்பாங்க. அந்த ஊரு கிராமத்துடைய கன்னி அம்மன் அவங்களுக்கு குலதெய்வமா இருக்கும். ஆனா எல்லாருக்குமே இது சரிபடும். இந்த மாதிரி பொதுப்படையான பலன்கள் வந்து நாங்களே சொல்றதுண்டு. இது தான் பரிகாரம். வந்து உங்க ரிலேஷன்ல உங்க குலத்துக்காரங்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தா நீங்க இத சொல்லலாம்னு சொல்லுறதுண்டு.
ஓகே ஓகே ஓகே. நல்ல பாருங்க குல தெய்வம் வந்து எந்த மாதிரி வந்து பேசி இருக்கு. உங்களோட நேரடியாவே பேசி இருக்கு. ஆனா அவங்களுக்கு தெரியல. நீங்க வழிகாட்டுனதன் மூலம் அவங்களுக்கு வந்து அந்தப் பாக்கியம் திரும்பக் கிடைச்சு.
அது என்ன வழிகாட்டுறதுன்னு சொல்றதுக்குன்னாலும் அவங்களுக்கு அது ஞாபகப்படுத்திக்கறதுக்கு என்ன அவங்க குலதெய்வம் உபயோகப்படுத்தப்பட்டன்னு சொல்லிக்கலாம். ஏன்னா அவங்க வந்து பதினாறு வயசு ஆயிடுச்சு. யாருக்காவது ஒரு பாரம்தான். ஒரு பேரன்ட்ஸ், ஒரு பொண்ணு குழந்தை வந்து புஷ்பவதி ஆகலைன்னா பாரம்தான்.
நீங்கக் குல தெய்வம் தெரிஞ்சு சொல்லுறீங்க, கண்டுபிடிச்சு சொல்றீங்க. இது தான் குல தெய்வம் அப்படின்னுட்டு எல்லா குலதெய்வத்தையும் உடனே கண்டுபிடிச்சுற முடியுமா? அதுல ரொம்ப இல்ல. ஒரு சில குல தெய்வம் எல்லாம் கண்டுபிடிக்குறது ரொம்ப கஷ்டம் அப்படிங்கிற மாதிரி எப்பயாவது ஃபீல் பண்ணி இருக்கீங்களா? அந்த மாதிரி சிரமப்பட்ட அனுபவம் எதாவது உண்டா என்ன? குலதெய்வத்துக்கு அந்த மாதிரியான ஒரு கஷ்டம் உங்களுக்கு இருந்தது.
குலதெய்வம் கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லி அனுப்புன கிளைன்ட்ஸ் உண்டு. ஏன்னா அதுக்கு நான் தகுந்த ஆள் கிடையாதுன்றது இருக்கலாம். அவங்களுக்கு குலதெய்வம் தெரியாதுன்றது இல்ல. அந்த நேரம் தான் குலதெய்வத்தை கண்டுபிடிப்பதற்கு நமக்குச் சக்தி இல்ல. வேற ஒருத்தர் யாரோ மறுநாளே கூட உன்னுகிட்ட பொறுப்பு சொல்லலாம். அந்த மாதிரி எல்லாம் நடந்ததுன்னு. ஆனா ரொம்ப சால்ஞ்ச் எனக்கு நடந்தது வந்து. அவங்க புதுக்கோட்டை காரங்க…. புதுக்கோட்டைல இருந்து வந்து எங்களுக்குக் குலதெய்வம் தெரியல. ஆனா நாங்க இப்ப வந்து ரொம்ப வருஷமா புதுக்கோட்டைல இருக்குறதுனால பூனேஸ்வரி வந்து வழிபட்டுட்டு இருக்கோம்னு சொன்னாங்க. அவங்க குலதெய்வம் பாக்கணும்னு சொல்லிச் சொன்னவுடனே போட்டுப் பார்த்தா ஒரு மணல் மேடு தெரியுது. தாகம் பூக் காடு தெரியுது. ஒரு சிந்துரம் பூசின ஒரு பெரிய கல்லாட்டம் தெரியுது. சரி நான் இப்ப எனக்கு வந்து என்ன சிந்துரம் பூசின முகம் அனுமார் தான். ஆமா நான் சொல்றேன் உங்களுக்கு அனுபவம். இல்ல மேடம். எங்களுக்குப் பெண் தெய்வம் சொல்றாங்க. பெண் தெய்வம் சொல்றாங்கன்னு சொல்லி நின்னாங்க. சரி என்று திருப்பித் திருப்பிப் பாத்தா அதுவே தான் காட்டி நின்றது. தெரியல. எனக்கு அந்தக் கல் வந்து பெண்ணா. ஆனா காட்டிக் கொடுக்க மாட்டேன்னு. நான் அவங்களுக்கு தெரியலன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன். ஆனா எனக்குள்ள உறுத்தல் இருந்துண்டே இருந்தது. ஏன்னா அதெல்லாம் நான் பிகினர் ஸ்டேஜ். ரெண்டாயிரத்து ஒன்னு ரெண்டாயிரத்து ரெண்டுல பாத்தா. அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கானு கிடையாது. ஜஸ்ட் ஒரு எக்ஸ்பீரியன்ஸ். அவங்களுக்கு சொல்லி அனுப்பிச்சிட்டு தெரியலம்மா இது தான் காட்டுறதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன். எதர்ச்சியா ஒரு மலேசியா கிளைன்ட்டுக்கு அவங்களோட ராமேஸ்வரத்துக்குப் போக சந்தர்ப்பம் கிடைச்சுது. அப்போ அங்க வந்த கைடு வந்து நம்புநாயகி ன்னு ஒரு அம்மன் இருக்காங்க. அந்த நம்புநாயகி வந்து ரொம்ப பவர்புல் அதுவும் பாத்துடலாமான்னு சொன்னேன். அங்க போய்ப் பாக்குறப்போ தான் எனக்கு உடம்பே இன்னைக்கு கூஸ்மன்ஸ் ஆகுது. நான் பாத்த அம்மனுடைய மூஞ்சி அங்க இருக்கு. கண்ணும் பொட்டும் இல்லாத இருந்துச்சுட்டு. அவங்க சொல்றாங்க. இதுக்கு பின்னாடி தான் தாகம் காடு இருக்கு. மணல்ல தான் நடந்து போனா கோயில் என்ட்ரன்ஸ் வரைக்கும் மணல் தான். ரெண்டாயிரத்து ரெண்டுல கோவில் என்ட்ரன்ஸ் வரைக்கும் கடவுளுடைய மணல் தான். அப்போ நான் ஒரு பூஜாரி கேக்குறப்போ நிறைய பேர் வந்து மதுரை, புதுக்கோட்டை, மலேசியா வெளிநாட்டுல எல்லாம் இந்த அம்மாவுக்கு குழந்தைங்க இருக்காங்கன்னு சொல்றப்போ, எனக்கு ஒரு பழக்கம். ஒரு குலதெய்வம் என்னால தெரியலன்னா, அந்தக் கிளைன்ட் ஓட நான் டச்சுல இருப்பேன். நாளைக்கு என்னைக்கு ஆனா ஃபியூச்சர்ல தெரிஞ்சா நாம சொல்லலாம்னு. சரி நான் போய்ப் பாக்குறப்போ இதுவா இருக்குமோ சொல்லிட்டு அவங்க வந்து திருப்பி வரச் சொல்லி அவங்களுடைய லைப் ஹிஸ்டரி கேட்டேன். அவங்களுக்கு தாத்தாவைப் பத்தி பாட்டன பத்தி கேக்குறப்போ, பாட்டனுடைய அப்பா ராமேஸ்வரத்துல தான் மீனவ வம்சத்துல பொறந்தவங்க எல்லாம் இன்னும் இப்ப பசங்க நல்லா படிச்சு சென்ட்ரல் கவர்மெண்ட் எம்பிளாய் இருக்குறப்போ என்கிட்ட வரப்போ நான் ஒரு சின்னத் தவறு செஞ்சேன். என்னன்னா, அவங்க அந்த மாதிரி எதுவும் நெனச்சு பாக்கல. சென்ட்ரல் கவர்மெண்ட் எம்பிளாய் புதுக்கோட்டை எல்லாம் நாங்க ரெண்டு மூணு ஜெனரேஷன் இருக்குறேன்னு அந்த வட்டத்துக்குள்ள தான் பாத்தது. நான் பண்ண தப்பு. அப்புறம் பாத்தா அவங்க தாத்தாக்கு ராமேஸ்வரம்தான் பூர்விகம். அப்போ ஹண்ட்ரட் பெர்ஸண்ட் இது தான் உங்களோட குலதெய்வம். மத்ததை நீங்கப் போய்க் அங்க பூஜாரி கேட்டுக்கோங்கன்னு. அங்க பூஜாரி வந்து இவங்க வம்சாவளி எல்லாம் எடுத்துக் கேக்குறப்போ அவங்க ஆமா உங்களுக்கு இது தான் குலதெய்வம்னு சொல்லிச் சொன்னுங்க. அவங்க சந்தோஷமா நாங்க எனக்குப் போன் பண்ணி ஆமா மேடம், இது தான் எங்களுடைய குலதெய்வம். இது வந்து எனக்கு ரொம்ப சேலஞ்ச் ஆ இருந்தது. தெரியலன்னு சொல்லித் தள்ளி வைக்கவும் முடியல. ஆமா. எப்படி தெரியப்படுத்துறதுன்னு தெரியல. குலதெய்வம் முடிவு பண்ணிட்டனா தன்னை தெரியப்படுத்திக்கிறது. யாரை ஆனாலும் கருவியாக உபயோகித்து தான் வெளியில வந்துடுச்சு.
சூப்பர் சூப்பர்! நம்புநாயகி அம்மன் கோயிலு அந்த இதெல்லாம் அரைச்சு மஞ்சள் எல்லாம் அரைச்சு பூசும் வழக்கமெல்லாம் உண்டு இல்லையா?
ஆமா ரொம்ப அற்புதமான கோவில் அது. நீங்க நிறைய பேருக்கு நிறைய பரிகாரங்கள் எல்லாம் சொல்றீங்க. பரிகாரம் செய்றாங்க. செய்றப்போ ஏதோ ஒன்னு தவறுதலா செய்துட்டாங்கனு வச்சுக்கோங்க. அது அத நீங்க எப்படியும் கூட இருந்து பாத்துட்டு இருக்க முடியாது. அவங்க எப்படி பண்ணுறாங்க? அவங்க சொல்லுவாங்க நாங்க பண்ணிட்டோம். பரிகாரம் எல்லாம் கரெக்டா பண்ணிட்டோம் அப்படிங்குற மாதிரி சொல்லுவாங்க. அந்த மாதிரி ஏதாவது ஒரு தவறாக அந்தப் பரிகாரத்தை செய்திருந்தால், அது நடக்கிறது. நீங்கச் சொன்ன மாதிரியான மாற்றங்கள் வருமா? இல்ல தவறா பரிகாரம் செய்ததுனாலே அவங்களுக்கு வந்து கிடைக்க வேண்டிய அந்தப் பலன் கிடைக்காம போகுமா? அப்படி ஆயிடுச்சுன்னா அதை எப்படி சரி பண்றது?
இப்ப வந்து பரிகாரம் எடுத்துச் சொல்றேன்னா, ஒரு டெடிகேஷன் செய்யணும். ஏதோ ஒரு சூழ்நிலைனால ஊருக்குப் போறோம். தீட்டு வந்துருச்சு. இப்போ ஒருத்தருக்கு ஒரு நாற்பத்தி எட்டு நாள் போங்கன்னு சொல்லி ஒரு பரிகாரம் எடுத்துக் கொடுக்கறேன். வச்சுக்கோங்க. அவங்களுக்கு நேச்சுரலி ஒரு தீட்டு வந்துடுச்சு. போக முடியல. தப்பு கிடையாது. உத்தியோக நிமித்தமா வெளியூருக்குப் போக வேண்டி தப்பு கிடையாது. ஆனால் ஒரு நெக்லெஜ்ஷன். ஆனா பாத்துக்கலாம். அந்த மாதிரி வந்ததுன்னா அது கடவுள ஒன்னும் தண்டிக்காது. உங்களுடைய கோரிக்கை இன்னும் தள்ளிப் போடப்படும். இப்ப நாற்பத்தி எட்டு நாள் இருபது நாள் நிறைய பேர் சொல்றது டூ டேஸ் போன மேடம். அதுக்கப்புறம் ஏதோ ஒரு தடை வந்து தடை இல்ல. மன சோம்பல். இருபத்தி எட்டு நாளா போயிட்டு இருக்குறோம். நடக்கல. இதுக்கப்புறம் எதுக்கு போறது? மனசு அந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது. அது தப்பு. நாற்பத்தி எட்டு நாள் முடிச்சு ஒரு கால் மண்டலம் வெயிட் பண்ணேன். இன்னைக்கு பரிகாரம் பண்ணி உடனே ரிசல்ட் கேக்குறவங்க தான் நிறைய பேர் இருக்காங்க. நான் பரிகாரம் சொன்னேன். முப்பத்தி எட்டு டேஸ் முடிஞ்சு பண்ணிட்டோம் மேடம். இன்னும் காரியம் நடக்கலை. கேக்குறவங்களும் இருக்காங்க. முழுசா பண்ணிட்டு காரியத்தை அனுபவிச்சவங்களும் இருக்காங்க. அது எனக்கு எப்படி தெரிய வரும்ன்னு திருப்பித் எதாவது ஒரு பிரச்சனைன்னா, அவங்க என்னைத் தேடி வர்றப்போ தான் அவங்களுக்கு அது நடந்துருக்கு. அதனாலதான் அவங்க ரெண்டாவது பிரச்சனைக்குத் தேடி வராங்க. கண்டுபிடிக்க முடியும். சில பேர் வந்து போன் பண்ணி உடனே நான் போனேன். நான் பண்ணிட்டேன். கரெக்டா பண்ணிட்டேன். இன்னும் வெயிட் பண்ணு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கிடைக்கும்னு சொன்னேன். இருக்காங்க. இப்படி பொறுமையா வெயிட் பண்றவங்களும் இருக்காங்க. பொறுமை இழந்து பாதியிலேயே விட்றவங்க இருக்காங்க. அந்த மாதிரி விடக் கூடாது. ரொம்ப டிசிப்லின் முக்கியம். யாரு எது எடுத்துக் கொடுத்தாலும் அது ஒழுங்கு ஒழுங்கு மறியா செய்யணும்.
ஓகே ஓகே புரியுது புரியுது. இந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் வந்து பிரசன்னம் பாக்கலாம் அப்படின்னு ஏதாவது குறிப்புகள் இருக்கா? என்னென்ன மாதிரியான சிக்கல்கள் வருகிறபோதெல்லாம் இந்தப் பிரசன்ன ஜோதிடத்தை நாடலாம்.
இப்ப வந்து பிரசன்ன ஜோதிடம். முன்ன எங்க குருநாதர் கிட்ட வரப்போ குலதெய்வத்தை பத்தி…. ரொம்ப உடம்பு சரியில்ல. பெட்டா இருக்காங்க. அவங்களுக்கு தீர்வு உண்டா? கேக்குறதுக்கும் நிலம் வாங்குறதுக்கு ஏதுவா இருக்கானு கேக்குறதுக்கு இருந்தது. இப்ப எல்லாத்துக்குமே ஒரு ஸ்பெஷலி மேடம். எங்களுக்குக் குல தெய்வம் தெரியும். ஆனா எங்க வீட்டுல பெண் தெய்வம் இருக்குன்னு சொல்றாங்க. ஆனா நிச்சயமாக அந்தக் காலத்துல எல்லா வீட்டுலயும் ஒரு பெண் தெய்வமும் உண்டு. ஆண் தெய்வமும் உண்டு. பெண் தெய்வம் வந்து அந்தக் குழந்தைகளுக்கு அம்மா பாக்காத இருக்குறதுக்கோசரம் வீட்டுல இருக்க பெரியவங்க, பாட்டிங்க அவங்க எல்லாம் வழிபட்டது உண்டு. பெண் தெய்வம் தேடி வர்றவங்க உண்டு. கல்யாணத்துக்கு வர்றவங்க உண்டு. கல்யாணம் டೈவர்ஸ் ஆயிடுச்சு. ரெண்டாவது கல்யாணத்துக்கு வர்றது உண்டு. அதே மாதிரி வந்து படிப்பு, வெளிநாடு போறது தாமதமாகுறது இல்ல. உத்தியோகத்துல வந்து ப்ரோமோஷன் எப்போ கிடைக்கும்? எல்லா விஷயத்துல தான் வராங்க.
ஓகே ஓகே. திருமணம் பத்தி சொன்னீங்க இல்லையா? இப்ப திருமணம்ங்குறதுல பிரசன்ன ஜோதிடத்தின் மூலம் என்ன தெரிஞ்சுக்க முடியும்? ஏன்னா நம்ம பொருத்தம் பாத்து கல்யாணம் பண்றோம். ஒரு சிலர் வந்து நல்லா வாழுறாங்க. ஒரு சிலர் வந்து வாழ்றது இல்ல. இந்த மாதிரியான விஷயங்களையும் நாம பிரசன்னம் மூலம் தெரிஞ்சுக்க முடியுமா? இல்ல பிரசன்னம் மூலம் இத தான் தெரிஞ்சுக்க முடியும். திருமண விஷயத்துல அப்படி இருக்கா?
இப்போ உங்களுக்குக் குழந்தைங்களுக்கு எப்போ கல்யாணம் நடக்கும்னு கேக்குறப்போ, கல்யாணம் வயசு வந்துடுச்சு. நாங்க ஜாதகம் எடுக்கனும்னு நினைக்கிறோம். எப்படின்னு கேக்குறப்போ, அந்த ஜாதகத்தை பாத்து பிரசன்னம் போட்டோன்னா, அந்தக் காந்தர விவாகம் லவ் மேரேஜ் அரேஞ்ச் மேரேஜ் சொல்லலாம்.
சொல்லலாம். அது சொல்லலாம். ஆனா அவங்க சேர்ந்து வாழுவாங்களா? வாழ மாட்டாங்களா சொல்ல முடியாது. ஏன்னா, இன்னைக்கு எல்லாருமே பொறுமை இல்லாத, ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இல்லாத பிரியறவங்க தான் அதிகமா இருக்காங்க. அவங்ககிட்ட போய் நாம ஒன்னுமே பேச முடியாது. கிரகங்களே ஸ்தம்பித்து நிக்கிறது. அதனால நாங்க சொல்ல முடியாது. பொருத்தம் பத்து பொருத்தம் இருக்கிற கல்யாணமே மூணாவது மாசத்துல இது பண்ணி டைவர்ஸ் லவுக்கு போயிடுச்சு. ஒன்னுமே ஒரு ரீசன் கேக்கப்போனா அப்படி வர்றப்போ அன்னைக்கு இருந்து நான் பொருத்தம் பாக்குறத விட்டுட்டேன். ஏன்னா நம்ம பொருத்தம் பாத்து சொல்லி அவங்க வாழனும். ஆமா அவங்களுடைய லௌகீக காரணத்துனால பிரியறவங்களுக்கு நாம எதுக்கு ஜாதகம் பொருத்தம் பாத்து சொல்லணும்னு பொருத்தம் பாக்குறது இல்ல.
ஒருத்தரு கடன் பிரச்சனையில் மாட்டிக்கிட்டாரு. எல்லாமே போயிடுச்சு அப்படிங்கிற மாதிரியான ஒரு சூழல். அந்த மாதிரி யாராவது வந்து நின்னு இருக்காங்களா? அவருக்குப் பரிகாரம் சொல்லி அவர் வாழ்க்கையில நல்ல மேல வந்த மாதிரியான அனுபவங்கள் ஏதாவது இருக்கா? வாழ்க்கையில.
இருக்குங்க. ஒருத்தருக்கு வந்து ஏறி காத்த ராமர் குல தெய்வம். ஒரு பெரிய பாக்கரி வச்சிருந்தாரு. ஒரு கிட்டத்தட்ட நூறு நூத்தி முப்பது பேர் வேலைச்சு. ஆல் ஆஃப் சடன் வித்தின் செவன் இயர்ஸ் பார்ட்னர் ஏமாத்திட்டு அவங்க வந்து அடிமட்ட நிலைக்கு வந்துட்டாங்க. அவரு வந்து ஒரு ஒரு இடத்துல அக்கவுண்ட்ஸ் எழுதிந்து, எந்தப் பங்க்ஷன்ஸுக்கும் போகாத தன்னை குறுக்கினிட்டு, அவங்களுக்கு பெரிய குடும்பம்.
ஆனா நாலு அண்ணன் தம்பிங்க அந்தப் பாக்கரியை நம்பி தான் இருந்தாங்க. அந்த மாதிரி பார்ட்னர் பண்ணுனா நாலு பேருடைய குடும்பம் நடு தெருவுக்கு வந்துடுச்சு. அவங்க வந்து என்ன பாக்க வந்தாங்க. அப்போ ஏறி காத்த ராமர் தான் அவங்களுடைய குல தெய்வம்னு சொன்னாங்க. எனக்கு வந்து குல தெய்வத்தை வந்து குல தெய்வம் கரெக்ட். ஆனா இடம் தப்புன்னு வருது. ராமர் காட்டுவது ஏறி காத்த ராமர் இருக்குற கோபுரத்தையும் காட்ட மாட்டேன்னுச்சு. அப்போ என்னன்னு அவங்களுடைய பூர்விகங்கள் கேப்பாங்க. பூர்விகம் கேட்டாதான் நம்ம குல தெய்வத்தை கண்டுபிடிக்க முடியும். அப்போ கேக்குறப்போ அவங்களுடைய முன்னோர்கள் வந்து திருநெல்வேலியில் இருந்துருக்காங்க. போர்த் ஜெனரேஷன் இருந்துருக்காங்க. அவங்களுக்கு ராமர் தான் குல தெய்வம். அப்புறம் பாத்து திருநெல்வேலி அவங்க சொல்லி முடிச்சு அடுத்தது நான் போட்ட உடனே எனக்கு ஒரு ஆத்தங்கரை காட்டுறது ராமர் காட்டுறாரு. அது ஏறிக்காத ராமர் கூட நெனச்சுக்கலாம். ஆனா திருநெல்வேலி சொன்னவுடனே இடது பக்கம் போக கிழக்கால போயி இருக்குற நதிக்கும் மேற்கால போயி இருக்குற நதிக்கும் டிஃபரன்ஸ் இருக்கு. அதைப் பாத்து உடனே நான் கேட்டுட்டு எங்க இருந்தாங்கன்னு தெரியுமான்னு. யாரோ எங்க தாத்தா வோட தாத்தா எல்லாம் திருநெல்வேலியில்.
வாத்தியார் வேலை பண்ணிட்டு இருந்துருக்காங்க. அப்புறம் எங்க அப்பாவுக்கு வந்து போஸ்ட் ஆபிஸ்ல வேலை கிடைச்சு நாங்க மதுரைக்கு வந்தோம். அப்படி மைகிரேன் வந்துருக்காங்க. அப்போ வந்து திருநெல்வேலி முழுக்க அந்தச் சுத்துப்பக்கத்துல இருக்க கிராம பேரெல்லாம் போட்டுப் கேக்குறப்போ ஏறி காத்த ராமர்க்கும், அந்தத் திருநெல்வேலியில் சேரன்மாதேவி பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு ராமர் கோவில் இருக்கு. அந்தக் கோவில் கனெக்ட் ஆகுறது. அப்போ அங்க போய்க் கேட்டு விசாரிங்கன்னு சொல்றப்போ, இவங்களோட தாத்தா காரங்களுக்கு மரியாதை உண்டு. அந்த இடத்துல முதல் மரியாதை. ஏன்னா அவரு தான் பூஜாரி தட்டெடுத்து இது பண்ணுது. ராமருக்கு வந்து திருமஞ்சனம் பண்ணுது. எல்லாமே இவங்க ஒரு சித்தப்பா வந்து மடப்பள்ளியில் நைவேத்தியம் பண்ணி கொடுத்து இருந்தாங்க. இத நான் கண்டுபிடிச்சு அவங்கள அங்க போ சொன்ன உடனே ஒரு மாசம் அந்தக் கோவில்ல நீங்க நாலு பேரு அண்ணன் தம்பிங்க. உங்களால முடிஞ்ச வேலைய பண்ணுங்கன்னு சொல்லி அனுப்பிச்சேன். சொல்லி அனுப்பிச்சதுல ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஏன்னா அந்தப் பார்ட்னரோட பையன் கம்பெனி டேக் ஓவர் பண்றப்போ அவன் கொஞ்சம் நியாயம் தர்மம் பாக்குற பையன்னு அங்கிள். எனக்குத் தெரியாது. எங்க அப்பா பண்ணுது. மன்னிச்சுக்கோங்க. திருப்பி நீங்க ஜாயின் பண்ணி எனக்குக் கைடன் பண்ணி கொடுங்க.
அண்ணன் சொன்னதா அவங்க திருப்பி வந்து சொன்னாங்க. இது நடந்தது இரண்டாயிரத்து ஏழு. அவரு வந்து அன்னைக்கே சொன்னாங்க. என்னோட நேம் கூடச் சொல்லலாம் மேடம்னு சொல்லிட்டு. அவரோட பேரு கிருஷ்ணாச்சாரி. அவரு ஏறி காத்த ராமர் கோவில் கிட்ட இருக்காங்க. சோ, அந்த மாதிரி லைப் அகைன் ரீஜெனரேஷன் மாதிரி கிடைச்சுது.
அப்போ அந்தக் குல தெய்வத்தை வந்து பொருத்த வரைக்கும் பொருத்துது. இன்று ஒரு சங்கரம் வந்தவுடனே தான் எங்க இருக்குன்னு தெரியப்படுத்தி அந்தப் குழந்தைகளை வரவேற்றது. அப்போ அங்க போய் வணங்கினா தான் அப்படி கிடையாது. ஸ்தலத்துக்கு ஒரு…. மகிமை உண்டு. மூர்த்திக்குன்னு ஒரு மகிமை உண்டு. அந்தச் ஸ்தலமும் மூர்த்தி சேர்ந்து குலதெய்வத்தை வணங்குனீங்கன்னா நாம இழந்ததை மீண்டும் பெறலாம்.
நீங்க யாருடைய கதையைதான் சொல்றீங்க? ஆனா நான் நிஜமா சொல்றேன். இதைப் பாக்குற நிறைய பேருக்கு உள்ள கனெக்ட் ஆகும். ஏன்னா நான் கூட எங்க வீட்டுல சொல்லிட்டு இருப்பேன். அதே சுவாமி தான அங்க இருக்குற சுவாமி தான இங்க இருக்குறாரு. லட்சுமி நரசிம்ம சுவாமி தான் எங்களோட குலதெய்வம். நான் சொல்லுவேன். அதே சுவாமி தான. நம்ம வீட்டுக்குப் பக்கத்துல அற்புதமான பழமையான சுவாமி இருக்காரு. இங்க கும்பிடுவோம், இங்க கும்பிட்டுக்குவோம் அப்படின்னு நான் சொல்லுவேன். இந்த மாதிரி எத்தனை பேருக்குக் கனெக்ட் ஆகுதோ எனக்குத் தெரியல.
நீங்கச் சம்டைம்ஸ் ஒரு இடத்துக்குப் போனீங்கன்னா அந்த இடத்துக்கு நீங்க முன்னாடியே வந்த மாதிரி ஒரு ஃபீல் ஏற்படும் தெரியுமா?
அது என்ன தேஜாவோ என்னமோ சொல்றாங்க. நமக்குத் தெரியாது. அப்படி வந்து அந்த இடத்துக்குப் போனோம்னா லெஃப்டில் திரும்புனா ஒரு பொட்டிக்கடை இருக்குமே. ரைட்டுல ஒரு தென்னை மரம் இருக்குமேன்னு தோணும். மரத்தோட நாம ரொம்ப கனெக்ட் ஆவோம். மரம் தான் பல வருடங்களாக இருக்கும். அப்படி இருக்குன்னா அந்த இடத்துக்கும் அந்த கிராமத்துக்கும் நமக்கு ஏதோ தொடர்பு ஏதோ ஜென்மத்துல இருந்திருக்கு. அதனாலதான் எண்ணங்கள் தான் சம்பந்தம்னு அடுத்த ஜென்மம் எடுக்குறோம். அந்தப் பசுமையான எண்ணங்கள் நினைவுபடுத்து.
லாஸ்ட் டைம் நாம பேசும்போது நீங்க அற்புதமா ஒரு பரிகாரம் எங்களுக்கு எல்லாருக்குமே சொல்லிக் கொடுத்தீங்க. நிறைய பேர் அதைக் கண்டிப்பா வீட்டுல செய்திருப்பார்கள். அவங்க இப்போ அந்த மாதிரியான ஒரு காமனா பிரொப்ளம்ஸ் க்கு என்ன மாதிரி வீட்டிலேயே நம்ம சின்ன சின்ன ரெமேடி பண்ணலாம் அப்படிங்கிற மாதிரி கூட நீங்க வழி காட்டினா நல்லா இருக்கும். இப்போ வீட்டுல எப்ப பாரு ஒரு ஒரு அமைதி இல்லாத ஒரு தன்மை இருக்கு. சண்டை சச்சரவு இல்லைனா ஏதோ ஒரு குழப்பம். அந்த மாதிரியே இருக்கு. வீட்டுல அமைதி தங்கணும் அப்படின்னு சொன்னா அதுக்கு என்ன மாதிரியான வீட்டுல வழிபாடுகள் என்ன பண்ணலாம்?
முதல்ல சண்டவும் ஆர்க்யுமெண்ட் பண்றத நிறுத்தணும். சரி அது நிறுத்தவும் நிறுத்த முடியலன்னா கஷ்டம். அத நிறுத்தது ஒரு வழி. உன்னோன்னு செவ்வாய்க்கிழமை தோறும் நீங்க முருகருக்கு முடிஞ்ச அளவுக்கு ஒரு அரளிப்பூ மாலை படத்துக்குப் போட்டு ஆறு விளக்கு ஏத்தி வச்சிருந்தீங்கன்னு வச்சுக்கோங்களேன். சஷ்டி கவசம் தெரிஞ்சா சொல்லலாம். இல்ல இதுல யூடியூப்ல போட்டு.
விட்டுட்டு அது பாடிடும். கூடவே பாடிக்கலாம் நம்மளும்.
அதுல எனக்கு உடன்பாடு இல்ல சார். நம்ம சொன்னா நல்லா.
நம்ம கூடச் சஷ்டி கவசம் படிக்கிறதுனால உள்ளுக்குள்ள பல அதிர்வுகள் பஞ்ச பிராணங்களுக்கு ஏற்படுது.
புரியுது புரியுது.
பஞ்ச பிராணங்களுக்கு ஏற்படுது. நீங்கத் தொடர்ச்சியா சஷ்டி கவசம் படிச்சிங்கன்னா பஞ்ச பிராணங்களுக்கு ஏற்படும். அந்த ஏற்படுற அந்த அதிர்வுகள் வந்து உங்களோட நெகடிவிட்டியே டீமோனிடைஸேஷன் பண்ணிடும்.
சரி என்ன அதனால தான் நாம வாயைத் திறந்து சொல்லணும். அப்படி சொல்ல முடியலன்னா ரெக்கார்டு போட்டு விட்டுட்டு புஸ்தகத்தைப் பாத்து மனசுலனாலும் சொல்லணும். இந்த மாதிரி முருகருக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு மூன்று மாத காலம் ஆனா பன்னெண்டு செவ்வாய்க்கிழமை வரும். சம்டைம்ஸ் பதினைந்து கூட வரலாம். ஒரு மாசம் அஞ்சு வாரம் வந்துதுன்னு வச்சுக்கோங்க. ஒரு எக்ஸ்ட்ரா வாரம் வந்துடுச்சு. தப்பு கிடையாது. ஆனா பன்னெண்டு வாரம் போறது.
அந்த விளக்கு போட்டுட்டு வரணும். நைவேத்தியம் வந்து தேனும் தினமாம். அதுல தான் சூட்சுமம் இருக்கு. கொஞ்சூண்டு தினமா ஓட ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுக்கணும். அந்த நைவேத்தியத்துல தான் சூட்சுமம் இருக்கு. அந்த நெகடிவிட்டி அதுல போயிடும். நீங்கச் சொல்ற அந்த நிம்மதி இல்லன்றது எதெல்லாம் காரணமா இருக்கோ அதெல்லாம் வாஷ் அவுட் பண்ணிடும்.
இப்போ செவ்வாய்க்கிழமை அன்னைக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வைத்து கந்த சஷ்டி கவசம் படிச்சு தேனும் திணை மாவும் நிவேதனம் செய்து வரணும். பன்னெண்டு வாரத்துக்கு செவ்வாய்க்கிழமையில் ஏதாவது நேரம் இருக்கா?
குறிப்பிட்ட காலைல ஒம்போது மணிக்கு முன்னாடி இல்ல சாயங்காலம் வந்து அஞ்சரை மணி இருந்து எட்டு மணிக்குள்ள.
இது ரொம்ப எளிமையாக எல்லாருமே செய்யக்கூடிய.
செய்யக்கூடிய எஃபெக்டிவ் பரிகாரம். கை மேல பலிதம் கிடைக்கும். ஏன்னா நமக்கே தெரியாத மூலை முடுக்குல ஏதோ பிரச்சனைகள் இருக்கும். வீட்டுல ஒரு நாலு பேர் இருக்காங்கன்னா நாலு பேரு ஜாதகமும் நல்ல ஜாதகமா நல்ல நேரங்களோட கூடிய ஜாதகமா இருக்காது. வெளியில இருக்கிற கோவ தாபங்களை கொண்டு வந்து வீட்டுல லேடீஸ் நல்லது. மொதல்ல ஒரே ஒரு சின்ன விஷயம். நிம்மதி போறதுக்கு காரணம் வீட்டுல லேடிஸை டாமினேஷன் பண்ணிட்டு அவங்க கண்ணீர் வர்ற மாதிரி ஆம்பளைங்க நடந்துக்க கூடாது. அது ரொம்ப முக்கியம். அது தாயா இருக்கட்டும், யாரா இருக்கட்டும் பெண்பிள்ளைகள் அழ வைக்கக்கூடாது.
ஆமா இப்போ உங்ககிட்ட ஏராளமானவர்கள் வந்து பிரசன்னம் பாத்துருப்பாங்க. அவங்களுக்கு பலன் கிடைச்சுருக்கும். இப்போ குறிப்பா என்ன மாதிரியான ராசி இல்லனா லக்னத்தை சேர்ந்தவர்கள் இந்த மாதிரியான பிரசன்ன ஜோதிடம் பாக்கணும் அப்படின்னு ஒரு ஆர்வம் அவங்களுக்கு ஏற்படும். யாரு அந்த மாதிரியாக அதிகமான ராசிக்காரர்கள் உங்கள வந்து சந்திச்சு இருக்காங்க.
மேஷ லக்னம், தனுசு லக்னம், தனுர் லக்னம், கும்ப லக்னம், மகர லக்னம், சிம்ம லக்னம் அதிகமா வருவாங்க. அவர்களுக்கு தேடுதல் ரொம்ப போயிடும். இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் குலதெய்வத்தை பற்றிக்கூறுல குலதெய்வத்தைப் பத்தி தேடுறாங்கன்னா, ஒரு குடும்பத்துல மேஷ லக்னம், சிம்ம லக்னம், கன்னி லக்னம் சேர்ந்தவங்களா இருந்தாங்கன்னா, இந்த வம்சத்துல பொறந்தவங்களுக்கு அந்த குடும்பத்துக்கு குலதெய்வம் தெரிஞ்சிடும். காற்று ராசி நீரு ராசிக்காரங்க ரொம்ப அதிகமா வருவாங்க.
அவங்க வராங்கன்னாவே தெரிஞ்சிடும். காலையில ஃபர்ஸ்ட் அப்பாயின்ட்மென்ட் மேஷம் லக்னம்ன்னா இன்னைக்கு அடுத்தது இவங்களா தான் இருக்கும்னு சொல்லிப் போட்டோ அப்படி தான் வந்து மாயும்.
பரவாயில்ல. இதுல இவ்ளோ நான் சும்மா தான் கேட்டேன். இதுல இவ்ளோ சுவாரஸ்யமா இருக்கு. சிறப்பு சிறப்பு. ஆமா நீங்க வழக்கமா நீங்க வழிபாடுகள் எல்லாம் சொல்றீங்க. இப்ப வரக்கூடியது வந்து தீபாவளி வருது. தீபாவளி அன்னைக்கு மகாலட்சுமி பூஜை பண்ணலாம் அப்படின்னு சொல்லிச் சொல்றாங்க. அந்தப் பூஜையை எல்லாரும் செய்யலாமா? ரெண்டாவது எப்போ செய்யணும்? மூணாவது எப்படி செய்யணும்?
சக்தி விகடனின் வீடியோக்களை தொடர்ந்து காண இந்தச் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். வீடியோ குறித்த தகவலை உடனுக்குடன் அறிய பெல் ஐகானில் கிளிக் செய்யுங்கள். வீடியோக்களை உங்கள் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். என்றென்றும் இறை பணியில் உங்களோடு சக்தி விகடன்